Monday, 22 September 2014

சிறுதானிய சமையல் - இது அடை மழைக்காலம்


சிறுதானிய அடை 

2-3 நபர்களுக்கு

தேவையான பொருட்கள்:

கம்பு - 100 gm 
சாமை - 100 gm 
திணையரிசி - 100 gm 
----------------------------------

மேற்கூறியவற்றை ஒன்றாக 20 நிமிடம் ஊற வைத்து பின் மிக்ஸ்யில் சிறிது கொரகொரப்பாக தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.

உங்கள் சுவைகேற்ப பச்சை மிளகாய், வெங்காயம், தேங்காய் மற்றும் கருவேப்பிலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மாவில் கலக்கவும்.

தோசை சட்டியில் சிறு சிறு அடைகளாக சுடவும்.
--------------------

>  தோசையை விட சற்று கனமாக இருக்க வேண்டும்.

>  என்ணெய் சற்று அதிகமாக ஊற்றப்படும்போது, அடை மொறுமொறுப்பாக வரும்.

>  இதே முறையில் வரகு அரிசி மற்றும் குதிரைவாலி அரிசியை பயன்படுத்தலாம்.

>  மாவுடன் முருங்கை இலை கலந்து சுட சுவையுடன் மணமும் அள்ளும்.